தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கான எச்சரிக்கை – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கான எச்சரிக்கை - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கான எச்சரிக்கை - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கான எச்சரிக்கை – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் நடத்த வேண்டும் என்றால் அதற்கு துறை வாரியாக அரசு உரிமம் பெற வேண்டியது அவசியம். எந்த பதிவும் இல்லாமல் பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பட்டாசு தொழிற்சாலை:

நாட்டில் பண்டிகை காலங்கள் மற்றும் பிற விசேஷ நாட்களில் மக்களின் கொண்டாட்டத்தில் பட்டாசும் முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக தீபாவளி என்றால் பட்டாசு தான் நம் நினைவுக்கு வரும். ஏனெனில் தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் பரவிய தொற்றின் காரணமாக தீபாவளி பண்டிகையின் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. அத்தகைய தொழிலில் ஈடுபடுவோரும் வேலை இழப்பிற்கு ஆளாகினர்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு!

இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பசுமை பட்டாசுகளை மட்டும் குறிப்பிட்ட நேரம் வெடிக்க அனுமதி வழங்கியது. 2022ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனால் தற்போது பட்டாசு உற்பத்தி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பட்டாசு உற்பத்தி தொடங்கி விட்டது. இந்த நிலையில் பதிவில்லாமல் இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

முறையாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஆய்வு நடத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைத்து தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குடிசை தொழிலாக பட்டாசு தயாரிக்கும் இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் தமிழ்நாடு அரசின் உத்தரவை கடைபிடிக்காமல் பட்டாசு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!