SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு!

0
SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை - முக்கிய அறிவிப்பு!
SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை - முக்கிய அறிவிப்பு!
SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், வங்கிச் சேவையை பெறுவதில் சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆதார் – பான் இணைப்பு:

கொரோனா தொற்றுக்கு முன்னரில் இருந்து அனைத்து ஆதார் எண்களுடனும், பான் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக தற்போது 31 மார்ச் 2022 க்குள் இணைக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு பிறகு ஆதாருடன் பான் இணைக்கப்பட்டால் பான் செயலிழந்துவிடும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139AA இன் படி, பான் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுள்ளவர்களும், வருமான வரி அதிகாரிகளிடம் தனது ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

மார்ச் மாத சம்பளத்துடன் DA 34% உயர்வு & 2 மாத நிலுவைத்தொகை – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அவ்வாறு செய்யத் தவறினால், ஆதார் எண் அறிவிக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட தேதி வரை பான் கார்டு செயலிழந்து விடும். ஜனவரி 24 ஆம் தேதி நிலவரப்படி 43.34 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதனால் பாரத ஸ்டேட் வங்கி தனது பயனர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், வங்கி சேவைகளை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கும் முறை:
  • முதலில் வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • இணைப்பு ஆதார் பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும்.
  • ‘இணைப்பு ஆதார்’ விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் பான் ஆதார் இணைப்பு முழுமை அடையும்.
  • வருமான வரித்துறை உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் விவரங்களுடன் சரிபார்த்து, அதன் பிறகு இணைக்கப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!