SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இதை செய்யாதீங்க! எச்சரிக்கும் PIB!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இதை செய்யாதீங்க! எச்சரிக்கும் PIB!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இதை செய்யாதீங்க! எச்சரிக்கும் PIB!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இதை செய்யாதீங்க! எச்சரிக்கும் PIB!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளும் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதனால் பல்வேறு வழிகளில் முறைகேடுகளும் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை PIB அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:

இந்தியாவில் தற்போது ஆன்லைன் முறையில் அனைத்து சேவைகளையும் பெற முடிகிறது. அத்துடன் முறைகேடுகளை நிகழ்த்த தினமும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக வங்கி அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு உங்களின் தனிநபர் விவரங்களை அறிந்து கொண்டு உங்களின் சேமிப்பு பணத்தை திருட முயற்சிக்கின்றனர். இது போன்று பல்வேறு வழிகளில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த தகவல் வெளியீடு!

அதன் தொடர்ச்சியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், SBI வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக SMS மூலமாக போலியான முகவரியில் இருந்து அனுப்பப்படும். இது போன்று ஏதேனும் SMS அல்லது CALLS வந்தால் வாடிக்கையாளர்கள் யாரும் நம்பி பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த SMSகளில் கூடுதலாக லிங்க்ஸ்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை வாடிக்கையாளர்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB எச்சரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக PIB தெரிவித்துள்ளதாவது, வாடிக்கையாளர்களுக்கு SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக “அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் SBI வங்கியின் ஆவணங்கள் காலாவதியாகி விட்டது. விரைவில் உங்கள் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும். இப்போது http://sbikvs.II கிளிக் செய்து நெட் பேங்கிங் மூலம் உங்கள் ஆவணங்களை அப்டேட் செய்யவும்” என்று ஏதேனும் மின்னஞ்சல்கள் அல்லது SMSகள் வந்தால் பதிலளிக்க வேண்டாம்.  அத்துடன் இதனை முடிந்தவரை பார்க்காமல் DELETE செய்ய வேண்டும். இது போன்ற ஏதேனும் SMS கள் உங்களுக்கு வந்தால்  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்க வேண்டும் என்று PIB அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!