நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!

0
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!

பொதுமக்களுக்கு உதவும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி பயனாளிகள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்த திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதியில்லா நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

எச்சரிக்கை பதிவு:

இந்தியாவில் ஆதார் மற்றும் பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதன் மூலம் மக்கள் மலிவு விலையில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். அதிலும் தற்போது மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ஒரே நாடு ஒரே அட்டை முறை வந்த பிறகு, இது இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பிய கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாத மாதம் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். ஒருவேளை இவற்றை சரிவர தொடர்ந்து வாங்காமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பொருளாதார அடிப்படையில் சர்க்கரை அட்டை, அரிசி அட்டையை பொறுத்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஒருவேளை தொடர்ந்து 6 மாதங்கள் ரேஷன் கார்டுகளில் உணவு தானியங்களை அட்டைதாரர்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற முக்கிய அறிவிப்பு அண்மையில் வெளியானது. மேலும் கொரோனா காலகட்டத்தில், பொதுமக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது, அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தரப்பிலிருந்து இலவச ரேஷன் பொருட்கள், நிதியுதவி போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் தனியார் அமைப்புகளும் தொழிலதிபர்களும் கூட கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர். இந்த சூழலில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி அல்லது கோதுமை) ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கியது.

Exams Daily Mobile App Download

இப்போது இந்த திட்டத்தை மேலும் மத்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தை பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக மத்திய அரசுக்கு புகார் வந்து உள்ளது. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக செல்வதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய நடவடிக்கையாக தகுதியில்லாத நபர்கள் உடனடியாக தங்கள் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியில்லாத நபர்கள் ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!