ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் கவனத்திற்கு – மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!

0
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் கவனத்திற்கு - மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் கவனத்திற்கு - மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் கவனத்திற்கு – மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!

நாளுக்கு நாள் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருவதால் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன்:

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தேவைகள் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பூர்த்தி செய்து கொள்ள முடியும். பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் இ-காமர்ஸ் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. Amazon, Flipkart, ShopClues மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்கள் மொபைல் போன் முதல் ஆடைகள் வரை பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நவம்பர் 8 முதல் இன்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் – அண்ணா பல்கலை!

அதே சமயம் ஆன்லைன் மூலம் பல மோசடிகள் நடந்து வருகிறது. எனவே பயனர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது எந்த வலைத்தளத்தில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு பின்பு பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது ஏமாற்றப்படுவதை தவிர்ப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • பயனர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டுமே ஷாப்பிங் செய்ய வேண்டும்.
  • இணையதளத்தின் பாதுகாப்பு நிலையை அறிந்துகொள்ள URL அருகில் உள்ள பூட்டு ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • Amazon, Flipkart, ShopClues, Pepperfry மற்றும் பிற பிரபலமான இணையதளங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யுங்கள்.
  • ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது வைரஸ் தடுப்பு மற்றும் ஃபயர்வால் மென்பொருள் இயக்கத்தில் இருக்க வேண்டும்
  • ஆன்லைனில் கேட்கப்படும் தகவல்களை புறக்கணிக்க வேண்டும்.
  • தேவையில்லாத செயலிகளை நிறுவ வேண்டாம்.
  • தெரியாத நபர் கொடுத்த இணைப்பை நம்ப கூடாது.
  • உங்கள் கணக்கின் Password அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.
  • தனிப்பட்ட நிதித் தகவலை வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கில் மட்டுமல்லாது, குடும்ப உறுப்பினர்களுடன் கூட பகிர வேண்டாம்.

இலவச மதிய உணவு அல்லது ஷாப்பிங் அல்லது பயணத்திற்கான சலுகை என ஈர்க்கும் இணைப்புகளை கிளிக் செய்யும் போது, மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கு தரவுகள் திருடப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. என பல்வேறு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here