ஆகஸ்ட் 26ம் தேதி வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் – முழு விபரம் இதோ!

0
ஆகஸ்ட் 26ம் தேதி வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் - முழு விபரம் இதோ!
ஆகஸ்ட் 26ம் தேதி வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் - முழு விபரம் இதோ!
ஆகஸ்ட் 26ம் தேதி வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் – முழு விபரம் இதோ!

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 26 ம் தேதி நடைபெறும் என்று சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

வக்ஃப் வாரிய தேர்தல்:

தமிழகத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்காக வக்ஃப் வாரியம் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த வக்ஃப் வாரியத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் வரும் 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – YONO Appல் வங்கி கணக்குகள் இணைப்பு!

வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் 12.08.2021 முதல் 16.08.2021 அன்று வரை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதன் பிறகு ஆகஸ்ட் 18ம் தேதி அளித்த வேட்பு மனுவை உறுப்பினர்கள் சரிபார்த்து கொள்ளலாம். இறுதியாக சிறுபான்மையினர் தேர்தல் ஆணையம் அனைத்து வேட்பு மனுக்களையும் சரிபார்த்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆகஸ்ட் 19 அன்று வெளியாகும்.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து ஓட்டுப் பதிவு ஆகஸ்ட் 26.08.2021 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். தேர்தல் சென்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகரில் நடைபெறும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலின் முடிவுகள் 27.08.2021 அன்று வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!