ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்க வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கித்துறை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் இல்லாமல் ATM மூலம் பணம் எடுத்துக்கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதை பயன்படுத்தி எளிய முறையில் பணம் எடுப்பது எப்படி என்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பணம் எடுக்கும் வசதி:
உலகளவில் பெருகிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அனுபவங்களால் இப்போதெல்லாம் அரசு மற்றும் தனியார் துறை சேவைகள் பலவும் ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டு இருக்கின்றது. இதில் குறிப்பாக பில் செலுத்துவது துவங்கி வங்கிகளில் பண பரிமாற்றம் வரையிலான பல சேவைகள் இப்போது ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. இந்த ஆன்லைன் முறையானது வங்கித்துறையில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஒரு வாடிக்கையாளர் தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே புதிய கணக்கை துவங்கவும், பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
Exams Daily Mobile App Download
இதனுடன் இந்த ஆன்லைன் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்கு, வங்கிகளின் NEFT, RTGS, UPI சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கை கொடுக்கிறது. இதனால் ATM, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவைகளுக்கான தேவைகள் கூட பெருமளவு குறைந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று காலத்தில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வங்கி நிறுவனங்கள் கார்டுகள் இல்லாமல் ATM மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்தது. இந்த சேவைகள் இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – முழு விபரம் இதோ!
இந்த முறையை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முதலில் UPI ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து உங்களுக்கு வேண்டிய பணத்தை உள்ளிடவும். இப்போது பரிவர்த்தனைக்காக QR code உருவாக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர் UPI செயலியில் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்து பின் எண்ணை உள்ளிட வேண்டும். இதன் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் பணம் பெறலாம். இந்த செயல்முறை மூலம் கார்டு ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் போன்ற மோசடிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தங்களை காத்துக்கொள்ள முடியும். இந்த வசதிகள் இப்போது ICICI, HDFC, SBI மற்றும் கோடக் மஹிந்திரா ஆகிய வங்கிகளில் மட்டும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.