தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல் – அரசு நடவடிக்கை!

0
தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல் - அரசு நடவடிக்கை!
தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல் - அரசு நடவடிக்கை!
தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல் – அரசு நடவடிக்கை!

நாட்டில் நிலவும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதாக டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் தினக்கூலி தொழிலாளர்களின் அகவிலைப்படி (DA) தொகையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி அரசு தலைநகரில் உள்ள திறமையற்ற தொழிலாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது டெல்லி அரசின் கீழ் செயல்படும் அனைத்து திட்டமிடப்பட்ட வேலைகளிலும் திறமையற்ற, அரை திறன், திறமையான மற்றும் இதர பணியாளர்களுக்கு பயனளிக்கும். இது பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட பெரிய நடவடிக்கையாகும்.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த அகவிலைப்படி தொகை சமீபத்திய திருத்தத்துடன் சேர்த்து திறமையற்ற தொழிலாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.16,064 லிருந்து ரூ.16,506 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல, அரை திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான ஊதியம் மாதம் ரூ.17,693 லிருந்து ரூ.18,187 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திறமையான தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.19,473 லிருந்து ரூ.20,019 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போதைய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மின்சார, விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே வெளியீடு!

கூடுதலாக, பணியாளர்களின் மேற்பார்வையாளர் மற்றும் எழுத்தர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களும் திருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மெட்ரிகுலேஷன் அல்லாத ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.17,693 லிருந்து ரூ.18,187 ஆகவும், மெட்ரிகுலேஷன் ஊழியர்களுக்கு ரூ.19,473 லிருந்து ரூ.20,019 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.21,184 லிருந்து ரூ.21,756 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் டெல்லி அரசு மட்டும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படியை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here