WhatsApp பயனர்களுக்கு குஷியான தகவல் – வாய்ஸ் மெசேஜ் செய்வதில் புதிய அம்சங்கள்!

0
WhatsApp பயனர்களுக்கு குஷியான தகவல் - வாய்ஸ் மெசேஜ் செய்வதில் புதிய அம்சங்கள்!
WhatsApp பயனர்களுக்கு குஷியான தகவல் - வாய்ஸ் மெசேஜ் செய்வதில் புதிய அம்சங்கள்!
WhatsApp பயனர்களுக்கு குஷியான தகவல் – வாய்ஸ் மெசேஜ் செய்வதில் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப் செயலி, பயனர்களை கவரும் வண்ணம் புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் மெசேஜ்களுக்கு கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளது. அவை, ஏற்கனவே ஐஓஎஸ் பயனர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ஸ் மெசேஜில் புதிய வசதிகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

வாய்ஸ் மெசேஜில் புதிய வசதிகள்:

உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் யூசர்களைக் கொண்டுள்ளது. கொரோனா வருகையால் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டு இருக்கும் நேரத்தில், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என்று இரண்டு தரப்பினருக்குமே, வாட்ஸ்அப் பயனுள்ள கருவியாக செயல்படுகிறது. சக ஊழியர்களை தனித்தனியாக chat வழியே உரையாடலாம் அல்லது குரூப் சாட்டை நிர்வகித்து, கண்காணிக்கவும் வாட்ஸ்அப் உதவியாக உள்ளது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – முக்கிய அறிவிப்பு!

ஐஓஎஸ் பயனாளிகளுக்கு வாய்ஸ் மெசேஜில் சில கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் அம்சங்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு உள்ளது. இந்த வசதி விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கவுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 பில்லியன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக, நிறுவனம் அந்த அம்சத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pause/Resume Recording

வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது, அதை வேண்டுமானால் பாஸ் செய்து வைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பின்னர், அதை resume செய்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Out of Chat Playback

வாட்ஸ்அப் பயனர்கள் சம்பந்தப்பட்ட சாட்டை விட்டு வெளியே வந்தாலும், வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Fast Playback on Forwarded Messages

வாய்ஸ்மெசேஜ்ஜை உங்கள் விருப்பப்படி 1.5X OR 2X என்ற வேகங்களில் கேட்டுக்கொள்ளலாம். இது அனைத்து விதமான ஆடியோ மெசேஜ்களுகக்கு பொருந்தும்

இந்த புதிய வசதிகளை, வாட்ஸ்அப் அனைத்து பயனர்களுக்கும் வரும் வாரங்களில் வழங்கவுள்ளது. புதிய அம்சங்களைப் பெற, வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வது அவசியமாகும்.

Wave form Visualisation

ஆடியோ மெசேஜ் கேட்கும்போது, ஒலி கேட்பதை பிரதிநிதித்துவம் அலை வரிசை போன்றவற்றை திரையில் காண முடியும். இந்த அம்சமத்தை ஏற்கனவே சில ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

Draft Preview

ஆடியோ மெசேஜ்ஜை அனுப்பவதற்கு முன்பு அதை SAVE செய்து, மீண்டும் ஒரு முறை PLAY செய்து சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திவிட்டு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Remember Playback

பயனர் வாய்ஸ் மெசேஜ் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அதனை பாஸ் செய்துவிட்டு, சாட்டை விட்டு வெளியே வந்து வேறு பணிகளை மேற்கொண்டாலும், மீண்டும் வாய்ஸ் மெசேஜ்ஜை முன்பு பாஸ் செய்த இடத்திலிருந்தே கேட்டிட முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!