இனி Gmail மூலம் Voice Call செய்யலாம் – Google நிறுவனத்தின் சூப்பர் அப்டேட்!

0
இனி Gmail மூலம் Voice Call செய்யலாம் - Google நிறுவனத்தின் சூப்பர் அப்டேட்!
இனி Gmail மூலம் Voice Call செய்யலாம் - Google நிறுவனத்தின் சூப்பர் அப்டேட்!
இனி Gmail மூலம் Voice Call செய்யலாம் – Google நிறுவனத்தின் சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளில் முக்கியமான ஒன்று ஜிமெயில். தற்போது கூகுள் ஜிமெயில் அப்டேட் வழங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஜிமெயிலில் வாய்ஸ் கால் செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாய்ஸ் கால்:

கூகுள் நிறுவனம் வழங்கி வரும் முக்கியமான சேவைகளில் ஒன்று ஜிமெயில். இது தனிநபர் / தொழில் நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூகுள் நிறுவனம் ஜிமெயிலில் அப்டேட் வழங்க உள்ளது. அவ்வாறு வழங்கப்படும் அப்டேடில் வாய்ஸ் கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. WhatsApp மற்றும் Facebook போன்று ஜிமெயில் சேவையில் வாய்ஸ் கால் செய்யும் அம்சம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jio நிறுவனத்தில் ரூ.100க்கு கீழ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!

இதன் மூலம் பயனர்கள் வேறு எந்த பயனருக்கும் குரல் அழைப்புகள் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கால் வசதியை இணையத்தின் மூலம் மட்டுமே பெற முடியும். கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஜிமெயில் தொலைபேசி அழைப்பு அம்சத்திற்கு ‘Call Ring’ என பெயரிட்டுள்ளது. மேலும் கூகுள் வழங்கும் வாய்ஸ் கால் சேவையில் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி மட்டுமே அழைக்க அனுமதிக்குமா அல்லது ஸ்பேம் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களை தடுக்க பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை இணைக்க மற்றும் டாப் அப் செய்ய வேண்டுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்ப்பது கட்டாயமான ஒன்று. பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்த விரும்பாத நிலையில் Skip Option வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற வீடியோ கால் செயலிகள் முதலியன மூலம் செய்யப்பட்டு வரும் வேலைகள் விரைவில் ஜிமெயில் மூலம் செய்யப்படும் எனவும் அதனால் கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற வீடியோ கால் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!