காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி – செப்.27 நுழைவுத்தேர்வு!

0
காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி - செப்.27 நுழைவுத்தேர்வு!
காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி - செப்.27 நுழைவுத்தேர்வு!
காந்தி கிராம பல்கலையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி – செப்.27 நுழைவுத்தேர்வு!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. அதற்கான நுழைவுத்தோ்வு காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் செப்.27ம் தேதி நடைபெறவுள்ளது.

நுழைவுத்தேர்வு:

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக வாழ்நாள் கல்வி விரிவாக்கத்துறை மற்றும் முருகப்பா கல்விக் குழுமம் இணைந்து உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வை நடத்துகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இத்தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு – மாலை நிலவரம்!

இதில் தகுதி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஓசூரில் அமைந்துள்ள முருகப்பா குழும மையத்தில், எலக்ட்ரீசியன், டா்னா், மெக்கானிக் மெஷின் டூல் மெயிண்டனன்ஸ், பிட்டா், மெஷினிஸ்ட் கிரைண்டா், செராமிக் மோல்டா், செராமிக் கிலன் ஆபரேட்டா், மோல்டா் ரெப்டாக்டரி, வெல்டா் ஆகியவற்றுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். காந்தி கிராம பல்கலை வளாகத்திலுள்ள பல்நோக்கு அரங்கில் நுழைவுத்தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் இந்தாண்டே அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

இந்த தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுடைய மாணவ. மாணவிகள் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மார்பளவு புகைப்படம் 2, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். பயிற்சி வழங்கப்படும் காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதி வழங்கப்படுகிறது. மேலும் சீருடை, காலணி, புத்தகங்கள் முதலியன மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழும் வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய 94884 85073, 94430 24310 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!