வனிதாவின் கேள்வியால் அதிர்ந்த விஜே – பிரியாணி கடை திறப்பு விழாவில் சம்பவம்!

0
வனிதாவின் கேள்வியால் அதிர்ந்த விஜே - பிரியாணி கடை திறப்பு விழாவில் சம்பவம்!
வனிதாவின் கேள்வியால் அதிர்ந்த விஜே - பிரியாணி கடை திறப்பு விழாவில் சம்பவம்!
வனிதாவின் கேள்வியால் அதிர்ந்த விஜே – பிரியாணி கடை திறப்பு விழாவில் சம்பவம்!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அவரை பேட்டி எடுக்க சென்ற விஜே ஒருவரை பார்த்து நீ என்ன என் பாய் ஃபிரெண்டா என கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்ட விஜே சற்று அதிர்ச்சி அடைந்தார்.

வனிதா விஜயகுமார்:

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா. இவர் கடந்த முறை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். அதற்கு முன்னாள் அவர் வாழ்வில் நிறைய விஷயங்கள் நடந்தாலும் பிக்பாஸிற்கு பின்னர் அவர் அசைவு கூட சர்ச்சையாக மாறியது. பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு யூடூப் சேனல்களில் அவர் செய்த லூட்டி எல்லை மீறி சென்றது.

தமிழக அரசில் 6,156 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான கால நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!

அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறினார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவர் நடுவராக கலந்து கொண்டார். உடல் எடையை குறைத்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் பிரியாணி கடை திறப்பு விழாவில் வனிதா விஜயகுமார், பூர்ணா, ஓவியா, ரேஷ்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவரை விஜே ஒருவர் பேட்டி எடுத்தார்.

‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!

அப்போது விஜே ஒருவர் வனிதாவை பார்த்து நமஸ்தே என்று கூற அவரோ, என்ன நமஸ்தேனு சொல்ற, டெல்லியில் இருந்தா வந்திருக்க, வணக்கம்னு சொல்லு என்றார். பூர்ணாவை பார்த்த அந்த விஜேவோ நான் அவரை பேட்டி எடுக்கலாமா என்று வனிதாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு வனிதாவோ, யாரை வேண்டுமானாலும் பேட்டி எடு, நீ என்ன என் பாய் ஃபிரெண்டா, நீ பிறரிடம் பேசினால் நான் பொறாமைப்பட என்று கடுப்பாகிவிட்டார். அதை கேட்ட விஜே சற்று அதிர்ச்சி அடைந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!