காதலர் தினத்தில் ‘பிக் பாஸ்’ ப்ரியங்கா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
காதலர் தினத்தில் 'பிக் பாஸ்' ப்ரியங்கா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
காதலர் தினத்தில் 'பிக் பாஸ்' ப்ரியங்கா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
காதலர் தினத்தில் ‘பிக் பாஸ்’ ப்ரியங்கா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் தொகுப்பாளர் ப்ரியங்கா தனது காதலர் தினத்தை தான் கொண்டாடிய விதம் குறித்தும், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடம் அதிகம் வைரலாகி வருகிறது.

காதலர் தினம்:

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் ப்ரியங்கா அதிக அளவிலான ரசிகர்களை கொண்டவர். இவரது பேச்சும், சிரிப்பும் எந்த வித சலனமும் இல்லாமல் ரசிகர்களை குஷியாக்கி விடும் என்பதால் இவருக்கு ஆதரவு பெருகி வந்தது. முதலில் ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆன ப்ரியங்கா, அதன் பிறகு மெல்ல மெல்ல தனது திறமையின் மூலம் விஜய் டிவியின் டிரேட் மார்க் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் முதல் விருது வழங்கும் நிகழ்ச்சி வரை அனைத்திலும் தனது தடத்தை பதிக்க தொடங்கினார்.

கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சினிமா உலகின் மிகப்பெரிய பிரபலங்கள் முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும் சிறு குழந்தை வரை அனைவரிடமும் இவர் நடந்து கொள்ளும் விதமும், காட்டும் அன்பும், ஒரே மாதிரியாக இருப்பது தான் இவர் மக்கள் மத்தியில் புகழடைய காரணமாக இருந்தது. சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ப்ரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டார். அதில், நிகழ்ச்சியின் இறுதி வரை வந்து அசத்தினார். ப்ரியங்கா எப்போதும் சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

மீண்டும் சர்ச்சையில் ‘குக் வித் கோமாளி 3’ – சுனிதாவை அழவைத்த ராகுல் தாத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, எவ்வளவு முக்கியமான நேரமாக இருந்தாலும் சாப்பாடு என்று வந்து விட்டால் அனைத்தையும் மறந்து விடுவார். இவருக்கும் விஜய் டிவியின் ப்ரோடக்சன் டீமில் பணியாற்றி வரும் பிரவீன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1 முறை கூட தனது கணவர் பற்றி ப்ரியங்கா பேசவில்லை. இது அனைவராலும் கவனிக்கப்பட்டு, இது தொடர்பாக அவரிடம் கேள்விகளும் கேட்கப்பட்டது. நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ப்ரியங்கா தனது ரசிகர்களுக்கு நன்றாக சாப்பிடவும், தூங்கவும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தான் நமக்கு நாமே கொடுக்கும் பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!