‘பிக்பாஸ் சீசன் 5’ல் களமிறங்கும் விஜே பிரியங்கா? உறுதியான தகவல்!

0
'பிக்பாஸ் சீசன் 5'ல் களமிறங்கும் விஜே பிரியங்கா? உறுதியான தகவல்!
'பிக்பாஸ் சீசன் 5'ல் களமிறங்கும் விஜே பிரியங்கா? உறுதியான தகவல்!
‘பிக்பாஸ் சீசன் 5’ல் களமிறங்கும் விஜே பிரியங்கா? உறுதியான தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில், முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா கலந்து கொள்ள இருப்பதாக வெளியான செய்திகள் சில தகவல்கள் மூலம் தற்போது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் 5

தமிழ் மக்களிடையே தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு முக்கிய விஷயம் என்றால் அது பிக்பாஸ் சீசன் 5 தான். கிட்டத்தட்ட 4 சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5ன் ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்களாக செல்வதாக பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி மாற்றம் – புதிய அட்டவணை வெளியீடு!

அதில் ஒருவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ மூலம் தமிழ் மக்களின் பேவரைட் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. பொதுவாக ஊடகத்தில் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் ஸ்லிம் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி விஜே பணியில் தனக்கென ஒரு பாதையை வகுத்து கொண்டவர் பிரியங்கா.

கிட்டத்தட்ட 7 வருடங்களாக விஜய் டிவியில் நீடித்திருக்கும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மட்டும் 5 சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளார். இது தவிர இசையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியிலும் பிரியங்கா விஜேவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ‘ஸ்டார்ட் மியூஸிக்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாப தொகுத்து வழங்க இருக்கிறார்.

ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

இது தொடர்பாக வெளியாகியுள்ள படப்பிடிப்பு புகைப்படங்களில் ஸ்டார்ட் மியூஸிக்கின் முதல் நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலங்கள், அருண், சுகேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தவிர ‘சூப்பர் சிங்கர் 8’ நிகழ்ச்சியும் தற்போது முடிவடையவுள்ளது. அந்த வகையில் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்ளாததால், அவர் பிக்பாஸ் செல்வதாக வெளியான தகவல் உறுதியாகியுள்ளது. முன்னதாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரியங்கா கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!