ஜீ தமிழ் “சூப்பர் குயின்” டைட்டில் வின்னராக தேர்வான விஜே பார்வதி – ரசிகர்கள் வாழ்த்து!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "சூப்பர் குயின்" டைட்டில் வின்னராக தேர்வான விஜே பார்வதி - ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் “சூப்பர் குயின்” டைட்டில் வின்னராக தேர்வான விஜே பார்வதி – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களின் ஒன்றாக ஜீ தமிழ் இருக்கிறது. இந்த சேனலில் புதிதாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் “சூப்பர் குயின்” இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் விஜே பார்வதி வெற்றி பெற்றார். இது குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

சூப்பர் குயின் நிகழ்ச்சி:

சன், விஜய் டிவி சேனல்களின் வரிசையில் ஜீ தமிழ் பல புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் ஒளிபரப்பி வருகின்றன. பல ஹிட் சீரியல்களை கொடுத்த பெருமை ஜீ தமிழ் சேனலுக்கு உண்டு. அந்த வகையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் குயின் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகள் களமிறங்கி தனி திறமையை வெளியே காட்டி அதன் மூலம் யார் வெற்றி பெற்றவர்கள் என தேர்வு செய்வார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் நகுல் இருக்கின்றனர். ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. தங்களின் திறமையின் மூலமாக இறுதி சுற்றிற்கு வந்த நாயகிகளில் ஒருவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஆர்யா, மற்றும் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளப்போகும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

இதில் போட்டியாளர்கள் தங்களுடைய தனி திறமையை வெளிப்படுத்திய நிலையில் இந்த சூப்பர் குயின் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே பார்வதி தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் இது ஒரு ‘ரன்-ஆஃப்-ஏ-மில்’ ரியாலிட்டி ஷோவாக இருக்கும் என்று நான் நினைத்தேன், இந்த டீம் உடன் சேர தயங்கினேன். ஆனால் இப்போது டைட்டிலை வென்று உள்ளேன். இந்த நிகழ்ச்சி ஒரு வாழ்நாள் அனுபவமாக இருந்தது, மேலும் இது வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் திரும்பி பார்க்க வைத்தது என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!