ஐந்தாம் வருட திருமண நாள்.. காதல் கணவருடன் கோலாகலமாக கொண்டாடிய VJ மணிமேகலை!

0
ஐந்தாம் வருட திருமண நாள்.. காதல் கணவருடன் கோலாகலமாக கொண்டாடிய VJ மணிமேகலை!
ஐந்தாம் வருட திருமண நாள்.. காதல் கணவருடன் கோலாகலமாக கொண்டாடிய VJ மணிமேகலை!
ஐந்தாம் வருட திருமண நாள்.. காதல் கணவருடன் கோலாகலமாக கொண்டாடிய VJ மணிமேகலை!

சின்னத்திரையில் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் மணிமேகலை. அவர் தன்னுடைய திருமண நாளை தனது காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

சன் மியூசிக் சேனலில் விஜேவாக இருந்து தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் விஜே மணிமேகலை. அவர் 5 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்பத்தை எதிர்த்து ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் வாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டி, தற்போது நல்ல இடத்தில் இருப்பதாக தனது யுடியூப் சேனல் வீடியோக்களில் அவர் அடிக்கடி சொல்லி இருக்கிறார். இவர் வெளியிடும் யூடியூப் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் வியூஸ் எகிறும்.

முடிவுக்கு வரும் விஜய் டிவியில் டாப் சீரியல்.. Climax ஷூட்டிங் Over- அடுத்த சீசன் எப்போது? வெளியான தகவல்!

Exams Daily Mobile App Download

இவருக்கு சின்னத்திரையில் ஒரு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தியது விஜய் டிவி தான். அந்த சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய இயற்கையான நகைச்சுவை திறமை மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இந்நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி மணிமேகலை ஹுசைனின் 5 ஆம் ஆண்டு திருமண நாள். அவர் தனது திருமண நாளில் தனது காதல் கணவர் ஹுசைன் உடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!