‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து பின்னர் இந்த சீரியலை விட்டு விலகிய விஜே தீபிகா, திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அவை தற்போது வைரலாகி வருகிறது.

விஜே தீபிகா

டிவி சேனல்களில் ஒரு விஜேவாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை சீரியல் நடிகையாக உயர்ந்தவர் விஜே தீபிகா. அதுவும் தான் நடிகையாக அறிமுகமான முதல் சீரியலிலேயே தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவ பெருமை விஜே தீபிகாவுக்கு உரித்தானதாகும். அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல் ஐஸ்வர்யாவாக, குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக சில மாதங்கள் வரை பயணித்து வந்தார் இவர்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்ததா? ரசிகர்கள் வெளியிட்ட ஆதாரம்!

ஆரம்பம் முதலே இந்த ஐஸ்வர்யா கதாப்பாத்திரம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த பட்சத்தில் தனது துடுக்கான பேச்சு மற்றும் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் ஒரு சிறந்த நடிகையாக பதிந்தார் விஜே தீபிகா. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, சில பல காரணங்களுக்காக இவர் சீரியலை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி இருக்க சீரியலை விட்டு விலகி இருந்தாலும் ரசிகர்களுடனான தன்னுடைய நட்புறவை வலைதளங்கள் மூலம் வளர்த்து வருகிறார் விஜே தீபிகா.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலியின் திருமண வீடியோ காட்சிகள் – இணையத்தில் வைரல்!

அந்த வகையில் சமீப காலமாக வலைதளங்களில் வைரலாகி வரும் வெட்டிங் போட்டோஷூட்களை செய்துள்ள தீபிகா திருமண கோலத்தில் தோன்றியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் விஜே தீபிகாவுக்கு திருமணம் ஆக போகிறதா என வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்றாலும் இது போட்டோஷூட் புகைப்படங்கள் என்பதை அறிந்தவுடன் அதற்கு அதிகளவு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!