விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவின் முகப்பரு மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து முகப்பரு பிரச்சனைகள் காரணமாக அந்த சீரியலை விட்டு விலகிய விஜே தீபிகா தனது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
விஜே தீபிகா
இன்றைய காலத்து இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவது சரும பிரச்சனைகள் தான். அந்த வகையில் பருவ மாற்றம், உணவு பொருட்கள், ஜீன் மாற்றம் போன்ற பல்வேறு விஷயங்கள் முகப்பருக்களாக வெளிப்பட்டு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த சரும பிரச்சனை காரணமாக ஒருவர் சின்னத்திரையை விட்டு விலகி இருக்கிறார் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா தான்.
“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – குவியும் வாழ்த்துக்கள்!
இந்த சீரியலில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமான விஜே தீபிகா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் இருந்து கிளாப்ஸ்களை அள்ளி வந்தார். இனிமேல் இவர் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனின் ஜோடியாக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தீடீரென முகப்பரு பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட தீபிகா, ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனைகள் அதிகமாகவே சீரியலை விட்டு விலக்கப்பட்டார்.
திடீர் திருமணம் செய்து கொண்ட “மாஸ்டர்” பட நடிகை மாளவிகா மோகனன் – ரசிகர்கள் ஷாக்!
இருந்தாலும் தன்னுடைய முகப்பரு பிரச்சனைகளுக்காக தன்னம்பிக்கையுடன் சிகிச்சை செய்து வரும் தீபிகாவுக்கு முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில், ஆரம்பம் முதல் இந்த மாதம் வரையும் முகப்பரு பிரச்சனைகள் எப்படி இருந்தது என்பது குறித்தும், இது எப்படி மாறி இருக்கிறது என்பது குறித்தும் ஒரு வீடியோவை வெளியிட இது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.