‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? புதிய கெட் அப்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? புதிய கெட் அப்! ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? புதிய கெட் அப்! ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? புதிய கெட் அப்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஜே தீபிகா தற்போது பட்டுப்புடவையில் புதிய தோற்றத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜே தீபிகா

மக்களின் மனம் கவர்ந்த விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீண்டுமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களை கட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் பல நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டுமாக தங்களது குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்க, தற்போது மீனாவின் மகளான கயலுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அரங்கேற இருக்கிறது. இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே தீபிகா.

திருமணமான பின் ‘செம்பருத்தி’ ஷபானா இன்ஸ்டாவில் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!

ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணன் கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக பலர் காட்டப்பட்டு வந்து அவர்கள் அனைவரும் சீரியலில் இருந்து விலகிய நிலையில், கடைசியாக விஜே தீபிகாவின் ஐஸ்வர்யா கதாப்பாத்திரம் தான் கண்ணனுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. அதே வேளையில் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகாவின் நடிப்பிற்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புகள் கிடைத்து வந்தது. இதனால் இந்த சீரியலில் இவர்கள் இருவரும் கண்ணன், ஐஸ்வர்யாவாக பயணிப்பார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் விஜே தீபிகா திடீரென சீரியலை விட்டு விலக்கப்பட்டார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் வெண்பாவுடன் இணைந்த பாரதி – வைரலாகும் வீடியோ!

என்றாலும் இந்த சீரியல் மூலம் கிடைத்த ரசிகர்களை தக்கவைத்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் விஜே தீபிகா, தற்போது போட்டோஷூட் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பட்டு உடை அணிந்து புதிய தோற்றத்துடன் ஒரு ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட விஜே தீபிகாவுக்கு, திருமணம் ஆகப்போகிறதா என வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here