கலர்ஸ் தமிழ் “ஜில்லுனு ஒரு காதல்” படப்பிடிப்பில் இருந்து விஜே தீபிகா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
கலர்ஸ் தமிழ்
கலர்ஸ் தமிழ் "ஜில்லுனு ஒரு காதல்" படப்பிடிப்பில் இருந்து விஜே தீபிகா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
கலர்ஸ் தமிழ் “ஜில்லுனு ஒரு காதல்” படப்பிடிப்பில் இருந்து விஜே தீபிகா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜே தீபிகா. அவர் தற்போது கலர்ஸ் தமிழ் சீரியல் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை விஜே தீபிகா:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அது மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகிறது. அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை கதையாக கொண்டுள்ள சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது. இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஜே தீபிகா. நடிப்பில் இது தான் முதல் வாய்ப்பாக இருந்தாலும் பல ரசிகர்கள் இவருக்கு வந்தனர்.

முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் – ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!

சீரியலை தவிர்த்து இவர் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களை என்டர்டைன் பண்ணி வருகிறார். இந்நிலையில் முகப்பரு பிரச்சனை காரணமாக அவரை சீரியலில் இருந்து விலகிவிட்டனர். தற்போது அவர் முகப்பரு பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்தி இருக்கிறார். அதனை தொடர்ந்து அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் வராமல் இருந்தது. அதனால் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், போட்டோஷூட், குறும்படம் என ரசிகர்களுக்கு அவ்வப்போது முகத்தை காட்டி வந்தார்

அதன் பின் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜில்லுனு ஒரு காதல் சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் சஞ்சனா கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். சிறிய ரோல் என்றாலும் விஜே தீபிகாவை சின்னத்திரையில் பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். சஞ்சனாவாக அவர் படப்பிடிப்பு தலத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!