சித்ராவை ஹேம்நாத் தான் அடித்தே சாகடித்திருக்க வேண்டும் – தாயார் பகீர் பேட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சித்ராவை ஹேம்நாத் தான் அடித்தே சாகடித்திருக்க வேண்டும் - தாயார் பகீர் பேட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!
சித்ராவை ஹேம்நாத் தான் அடித்தே சாகடித்திருக்க வேண்டும் - தாயார் பகீர் பேட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!
சித்ராவை ஹேம்நாத் தான் அடித்தே சாகடித்திருக்க வேண்டும் – தாயார் பகீர் பேட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!

திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வந்த சித்ராவின் மரணம் குறித்த பல செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் சித்ராவை ஹேம்நாத் தான் கொலை செய்திருக்க வேண்டும் என சித்ராவின் பெற்றோர்கள் கூறும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.

சித்ராவின் மரணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக அறிமுகமானவர் தான் சித்ரா. இத்தொடரில் நடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். ஒரு நாள் சித்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்கிற விஷயம் வெளியாகி தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சித்ரா இறப்பதற்கு முதல் நாள் வரைக்கும் கூட சூட்டிங்கிற்கு சென்றிருக்கிறார். ஷூட்டிங்கில் அனைவரிடமும் சாதாரணமாக கலகலப்பாக பேசி இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இதற்குப் பிறகு ஒரு சில மணி நேரத்திற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார். உண்மையாகவே சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சித்ரா மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஹேம்நாத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சித்ராவின் மரணம் குறித்து ஹேம்நாத்திடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் ஹேம்நாத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சித்ராவுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் கூட ஹேம்நாத் பல பெண்களுடன் சுற்றிக்கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.

கண்ணனை திட்டிய கோபி, ஒரே மாதிரி புடவை வாங்கி கொடுத்த பாக்கியா – மகா சங்கமம் சீரியல் இன்றைய எபிசோட்!

இதுமட்டுமல்லாமல் காசுக்காக ஹேம்நாத் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தற்போது ஹேம்நாத் தான் எனது மகளை கண்டிப்பாக கொலை செய்திருக்க வேண்டும் என சித்ராவின் பெற்றோர்கள் அளிக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது சித்ரா இறந்த பிறகு அவரது கழுத்தில் சில காயங்கள் இருந்தன. மேலும் கண்டிப்பாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டால் இந்த மாதிரி காயம் வராது. கழுத்தில் கடித்து வைத்து ஹேம்நாத் தான் வலுக்கட்டாயமாக சித்ரவதை கொலை செய்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் கதறும்படியான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!