மீண்டும் திரையுலகிற்கு வருவாரா விஜே அர்ச்சனா? ரசிகர்களிடம் சொன்ன விளக்கம்!!

0
மீண்டும் திரையுலகிற்கு வருவாரா விஜே அர்ச்சனா? ரசிகர்களிடம் சொன்ன விளக்கம்!!
மீண்டும் திரையுலகிற்கு வருவாரா விஜே அர்ச்சனா? ரசிகர்களிடம் சொன்ன விளக்கம்!!
மீண்டும் திரையுலகிற்கு வருவாரா விஜே அர்ச்சனா? ரசிகர்களிடம் சொன்ன விளக்கம்!!

சின்ன திரை ரியாலிட்டி ஷோகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனாவிற்கு தற்போது மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது திரையுலகிற்கு திரும்புவார் என கேள்வி எழுந்துள்ளது.

விஜே அர்ச்சனா:

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக கொடிகட்டி பறந்து வந்த அர்ச்சனா நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் அவர் Wow Life என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் போட்ட பாத்ரூம் டூர் சமூக வலைத்தளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. மேலும் இதன் மூலம் அதிகம் எதிர்தரப்பு ஆதரவுகளை இவர் பெற்றார்.

சன் டிவி ரோஜா சீரியலை விட்டு விலகும் ஹீரோ சிபு – ரசிகர்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் உடல் நிலை சரி இல்லாமல் இருந்ததாக கூறப்பட்டது. இது குறித்து மருத்துவமனை சென்ற போது மூளையில் சிறு ஓட்டை உள்ளது என்றும் அதனை அறுவை சிகிச்சை மூலமாகவே சரி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். இது குறித்த விளக்கத்தை தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவரது மகள் 1 மாத காலமாக அந்த சேனலை நிர்வாகித்து வருகிறார். தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது தனக்கு என்ன நடந்தது என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆபரேஷனுக்கு பிறகு 10 நாட்கள் மருத்துமனைவியில் தங்கியிருந்து வீடு திரும்பினேன். உடல் எடையும் கொஞ்சம் குறைந்துள்ளது. மூக்கு வழியே ஆபரேஷன் நடந்ததால், குரலும் பழைய நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை. இன்னும் சில வாரங்கள் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதன்பின் மீடியா வேலைக்கு திரும்பிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். அவர் தற்போது, விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!