8GB ரேம், 50MP கேமராவுடன் Vivo Y33s ஸ்மார்ட்போன் – மலிவு விலையில் இன்று அறிமுகம்!

0
8GB ரேம், 50MP கேமராவுடன் Vivo Y33s ஸ்மார்ட்போன் - மலிவு விலையில் இன்று அறிமுகம்!
8GB ரேம், 50MP கேமராவுடன் Vivo Y33s ஸ்மார்ட்போன் - மலிவு விலையில் இன்று அறிமுகம்!
8GB ரேம், 50MP கேமராவுடன் Vivo Y33s ஸ்மார்ட்போன் – மலிவு விலையில் இன்று அறிமுகம்!

மலிவு விலையில் பல்வேறு வசதிகளை கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் விவோ நிறுவனம், தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி (இன்று) தனது புதிய விவோ Y33s மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

VIVO Y33s போன்கள்:

விவோ நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய மலிவு விலையிலான 4 ஜி, 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஆகஸ்ட் 23-ம் தேதி தனது புதிய விவோ Y33s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் சிறந்த தொழிநுட்ப வசதியுடன் வெளியிடப்பட உள்ளது. இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளது. இந்த போன் ரூ.17000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம்:

விவோ Y33s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது. 1080 x 2400 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி கார்டு ஆதரவுடன் இந்த போன் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

குறிப்பாக செல்பி, வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16 எம்பி முன்புற கேமராவுடன் இந்த விவோ Y33s ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் பின்புறம் 50 எம்பி பிரைமரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விவோ Y33s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. கேம் விளையாட இந்த போன் நல்ல வசதியாக இருக்கும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5 மற்றும் யுஎஸ்பி ஓடிஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த போனில் அருமையான வசதிகள் உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!