இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி? ரசிகர்கள் ஷாக்!

0
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி? ரசிகர்கள் ஷாக்!
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி? ரசிகர்கள் ஷாக்!
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி? ரசிகர்கள் ஷாக்!

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட உள்ளார் என கூறப்படுகிறது.

விராட் கோஹ்லி:

மகேந்திர சிங் தோனிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வித போட்டிகளுக்கும் கேப்டன் ஆக உள்ளவர் விராட் கோஹ்லி. மாடர்ன் கிரிக்கெட்டில் உலகளவில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். கேப்டன் ஆக பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ள விராட் கோஹ்லி விரைவில் அதில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் ரோஹித் ஷர்மாவிடம், விராட் கோஹ்லி கேப்டன் பதவியை ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோஹ்லி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆர்வமாக உள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து பட்டங்களை பெற்றுத் தந்து அசத்தியுள்ளார் கேப்டன் ரோஹித் ஷர்மா. 32 வயதான கோஹ்லி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ஆக இருந்துள்ளார். அதில் 65 வெற்றி, 27 தோல்விகளும் அடக்கம். அவர் கேப்டனாக இருந்த 45 டி 20 போட்டிகளில், இந்தியா 27 முறை வெற்றியும், 14 முறை தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் 34 வயதான ரோஹித், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 10 முறை வழிநடத்தியுள்ளார். அதில் இரண்டு முறை தோல்வியடைந்த போது எட்டு முறை வெற்றி அடைந்துள்ளார். டி20 களில், 19 முறை கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றம்! மெட்ரோ பணிகள் எதிரொலி!

T20, ODI மற்றும் டெஸ்ட் தொடர் என அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக இருப்பதால் ஒட்டுமொத்த பொறுப்புகளும் அவரது பேட்டிங்கை பாதிக்கிறது என்பதை விராட் கோஹ்லி உணர்ந்துள்ளார். கோஹ்லியின் கேப்டன்சி மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்திய அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை. சமீபத்தில், ஜூன் மாதம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. இது மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!