IPL 2021 – RCB கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோஹ்லி! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
IPL 2021 - RCB கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோஹ்லி! ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL 2021 - RCB கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோஹ்லி! ரசிகர்கள் அதிர்ச்சி!
IPL 2021 – RCB கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோஹ்லி! ரசிகர்கள் அதிர்ச்சி!

நடப்பு ஐபிஎல் 2021 தொடருக்கு பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் (RCB) கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 32 வயதான விராட் கோஹ்லி கேப்டன் பொறுப்பை துறப்பதற்கான அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி:

இந்திய அணியின் கேப்டனும், மார்டன் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த டாப் பேட்ஸ்மேனுமான விராட் கோஹ்லி தனது அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். நடப்பு T20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னதாக அறிவித்து இருந்தார். மேலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் ஆக விராட் கோஹ்லி தொடர்வார். இதனால் T20 அணிக்கு தற்போதையை துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. விராட் கோஹ்லியின் ரசிகர்களுக்கு இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு ஷாக் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஹால் டிக்கெட் – செப்.20 வெளியீடு!

அதில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனுக்குப் பிறகு விராட் கோஹ்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக பேசிய கோஹ்லி, ஆர்சிபி அணியில் ஒரு சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் பயணமாக இருந்தது. ஆர்சிபி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என உணர்ச்சி வசப்பட தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு சுலபமான முடிவு அல்ல, அணி உரிமையாளரின் நலனுக்காக நன்கு சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. நான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.

IPL 2021, CSK vs MI LIVE Updates : 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!

கேப்டன் ஆக பதவி விலகுவதற்கு முன், கோஹ்லி இந்த ஆண்டு ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏழு போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஆர்சிபி தற்போது அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை (கேகேஆர்) ஷேக் சயீத் மைதானத்தில் எதிர்கொள்கின்றது. விராட் கோஹ்லி கடந்த சீசன்களில் ஆர்சிபியை ஐபிஎல் 2016 இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார், ஆனால் ஒரு கேப்டனாக பெங்களூரு அணிக்காக இதுவரை கோப்பையை பெற்றுத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!