ODI கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம் – புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்!

0
ODI கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம் - புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்!
ODI கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம் - புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்!
ODI கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம் – புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் T 20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய பிற்பாடு, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து நீக்கப்பட்டு அந்த பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மா

கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய அரபு எமீரகத்தில் (UAE) நடைபெற்ற T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு T 20 கேப்டன் பதவியை துறப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவித்திருந்தார். இதுவரை அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி வகித்து வந்த விராட் கோலி தனது பணிச்சுமை காரணமாக இப்பதவியை துறப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம்! மாணவர்கள் கோரிக்கை!

இதையடுத்து இந்திய T 20 அணிக்கான கேப்டன் பொறுப்பு 34 வயதான வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியும் தற்போது பறிக்கப்பட்டு, ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விராட் கோலியின் ஐந்தாண்டு வெள்ளைப் பந்து ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கோலியை இடமாற்றம் செய்யும் இந்த முடிவை இந்திய தேர்வுக்குழு எடுத்துள்ளது.

கோபி ராதிகாவை ஒன்றாக பார்த்த ராமமூர்த்தி, பிரபலமான பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இது தொடர்பான அறிவிப்பில், BCCI எவ்வித காரணங்களையும் விவரிக்காமல் ஒருநாள் மற்றும் T 20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மா பொறுப்பேற்க வேண்டும் என்று தேர்வாளர்கள் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அஜிங்க்யா ரஹானே வகித்து வந்த டெஸ்ட் துணை கேப்டன் பதவியை தற்போது ரோஹித் பொறுப்பேற்றுள்ளார்.

அதாவது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து பணிச்சுமை காரணமாக நீக்கப்பட்ட ரோஹித் ஷர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கிறார். இவருடன் ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். தவிர காயம் காரணமாக நியூசிலாந்து டெஸ்டை தவறவிட்ட கே.எல்.ராகுலுடன், ஹனுமா விஹாரி, ஜெயந்த் யாதவ், ஆர் அஷ்வின், சேட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரும் அணியில் இடம்பெறுள்ளனர்.

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய கோரிக்கை!

இந்தியாவின் ஒயிட்-பால் கேப்டனாக கோலியின் பயணம்:

இப்போது இந்திய அணியின் ODI கேப்டனாக ரோஹித் ஷர்மா உயர்த்தப்பட்டதன் மூலம், கோலியின் ஒயிட்-பால் கேப்டன் பதவி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ODI கேப்டன் பதவியில் முழு நேரமாக பொறுப்பேற்ற விராட் கோலி 50 அல்லது அதற்கு மேற்பட்ட ODIகளில் தலைமை தாங்கி இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் இந்தியா ஒரு ICC போட்டியை வெல்லத் தவறிவிட்டது. ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

மற்றும் 2019 இல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் T 20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக கோலி அறிவித்த நேரத்தில், டெஸ்ட் கேப்டனாக இருப்பதுடன், ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் தொடர விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள விராட் கோலி டெஸ்ட் தொடரின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!