விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் கணவர் மகனுக்கு கொடுத்த பரிசு – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் கணவர் மகனுக்கு கொடுத்த பரிசு - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் கணவர் மகனுக்கு கொடுத்த பரிசு - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் கணவர் மகனுக்கு கொடுத்த பரிசு – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா, தற்போது தனது மகன் ஷாத்விக் பிறந்த நாளுக்கு அவரது கணவர் கொடுத்த கிப்ட் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடை மூர்த்தியின் கை வசம் வருமா என்ற எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே தூண்டி இருக்கிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தி, கதிர், ஜீவா அனைவரும் சேர்ந்து புதிதாக ஒரு கடை கட்டுகின்றனர். இந்த கடை சரியான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி அதிகாரிகள் சீல் வைத்து செல்ல, அந்த கடையை மீட்பதற்காக மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அந்த அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

காதலி & திருமணம் குறித்து மனம் திறந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ரசிகர்கள் உற்சாகம்!

இப்படிப்பட்ட கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் சீரியலில், இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய கடை எப்படி மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. விஜய் டிவி சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை ஹேமா தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக சுமார் 4 ஆண்டுகள் வரை பயணித்து வருகிறார்.

எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஹேமா, தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறார். இவரது யூட்யூப் வீடியோவில் அதிகம் இடம்பிடிப்பது குடும்ப நிகழ்வுகள் தான். அந்த வகையில் தற்போது கூட தனது மகன் ஷாத்விக்கின் பிறந்த நாளுக்காக அவரது கணவர் கொடுத்திருக்கும் பரிசை வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டுள்ளார் ஹேமா.

டாக்டர் மீது பாசத்தை கொட்டும் இனியா, தாத்தாவிற்கு செய்வதை சொல்லி காட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அந்த வீடியோவில், செப்டம்பர் மாதத்தில் தான் தனது குழந்தையின் பிறந்த நாள் வருவதாகவும், ஆனால் 8 மாதத்திற்கு முன் அந்த பரிசை எதற்காக அவரது கணவர் வாங்கி வந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஹேமா. அதாவது, தனது ஒன்றரை வயது மகனுக்காக ஹேமாவின் கணவர் சதீஷ் ஒரு பிளே ஸ்டேஷனை வாங்கி வந்திருக்கிறாராம். இது மகனுக்காக வாங்கியது இல்லை என்று கண்டுபிடிக்கும் ஹேமா, தனது கணவர் பொய் சொல்லுவதாக கூறி அந்த பிளே ஸ்டேஷனை அன்கவர் செய்துள்ள சில காட்சிகள் வீடியோவில் இடம்பிடிக்க அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!