விஜய் டிவியில் இருந்து விலகிய ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவியில் இருந்து விலகிய 'குக் வித் கோமாளி' புகழ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் இருந்து விலகிய 'குக் வித் கோமாளி' புகழ் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் இருந்து விலகிய ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் விஜய் டிவியில் இருந்து தீடீரென ஜீ தமிழுக்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

குக் வித் கோமாளி புகழ்:

விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோ மூலமாக அதிக ரசிகர்களை ஈர்த்த பெருமை புகழுக்கு மட்டுமே சேரும். அவரது முகபாவனைகள், நிமிஷத்துக்கு ஒரு கௌண்டர் என ரசிகர்களை சிரிக்க வைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் என்றே சொல்ல்லாம். இவ்வாறு புகழ் தனது மீடியா வாழ்க்கையை 2016ல் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் துவங்கினார்.

மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் மணக்கோலத்தில் இணைந்த தீபிகா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இதையடுத்து, காமெடி நடிகராக வலம் வந்தவர், தற்போது MR. Zoo கீப்பர் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிவிட்டார். அந்த அளவுக்கு பிரபலத்தை இந்நிகழ்ச்சி பெற்று கொடுத்தது. இவ்வாறு புகழுக்கு கிடைத்த பேருக்கும், புகழுக்கும் அளவே இல்லை. மேலும், படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்ற காரணத்தினால், குக் வித் கோமாளி சீசன் 3 ல் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே தலை காட்டி வருகிறார் புகழ்.

இந்நிலையில், தற்போது திடிரென ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இருப்பது போல் வீடியோ ஒன்று வெளியாகியது. இதனை பார்த்த பலரும், புகழ் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சென்றுவிட்டார் என்று விமர்சிக்க தொடங்கினர். ஆனால், அதற்கான உண்மையான காரணம் புகழ் அஷ்வினுடன் இணைந்து நடித்த என்ன சொல்ல போகிறாய் படம் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பு ஆகிறது. அதற்கான ப்ரோமோஷனுக்காக தான் புகழ் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!