விருந்தில் அனைத்து உணவையும் ஒரு பிடி பிடித்த ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!
ஆலியாவிற்கு தற்போது தான் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் குழந்தையை கவனித்துக்கொள்வதில் பிஸியாக இருக்கிறார். தற்போது ஒரு விருந்தில் அருகில் இருப்பவரை கூட பார்க்காமல் ஒரு பிடி பிடிக்கும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
விருந்து சாப்பிட்ட ஆலியா:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா. இவர் அதே தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்த போதும் ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பின்பு, ஆலியா ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஐலா பாப்பாவிற்கு நியாபகமாக தாய்ப்பாலில் ஆபரணங்கள் செய்து கொடுத்துள்ளார்.
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!
ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே சீரியலில் மீண்டும் இணைந்துவிட்டார். பின்பு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆலியா சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்துவந்தார். இவரது துணிச்சலை பலரும் பாராட்டினர்.
பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் இணைந்துகொள்வேன் என கூறினார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறக்கவும் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சீரியலில் இணையமாட்டேன் என கூறிவிட்டார். தற்போது ஆலியா ஒரு விருந்துவிழாவில் அனைத்து உணவையும் விரும்பி சாப்பிடும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.