நடிகை ஆலியா போலவே அச்சு அசலாக இருக்கும் குழந்தை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகை ஆலியா போலவே ஆச்சு அசலாக இருக்கும் குழந்தை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா போலவே ஆச்சு அசலாக இருக்கும் குழந்தை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை ஆலியா போலவே அச்சு அசலாக இருக்கும் குழந்தை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் சிறந்த ஜோடியாக கலக்கி வரும் நடிகை ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடிக்கு முதலாவதாக ஐலா என்ற பெண்குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக அர்ஷ் என்ற பையன் பிறந்திருக்கிறான். இந்நிலையில் ஆலியா போலவே ஐலா இருப்பதாக ரசிகர்கள் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆலியா சஞ்சீவ்:

தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ்- ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு அர்த்தமாக ஐலா என்ற மகள் இருக்கிறார். தன்னுடைய மகள் பிறந்து சில மாதங்களில் ஆலியா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் சீரியலில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் 9 மாதம் வரை சீரியலில் அவர் நடித்தார்.

தன்னுடைய சந்தோஷமான தருணத்தை வீடியோவாக வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா – ரசிகர்கள் வாழ்த்து!

அதன் பின் சீரியலில் இருந்து விலகிய அவருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அர்ஷ் என தனது குழந்தைக்கு பெயர் வைத்து மகிழ்ந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட கனெண்டாக அர்ஷ் பிறந்தது தான் இருந்தது. இந்நிலையில் ஆலியா தனது கணவருடன் இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிடுவார். தன்னுடைய மகன் பிரசவம் பற்றிய அவருடைய வீடியோ வைரலானது.

ExamsDaily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது ஐலாவின் சிறு வயது வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆலியாவும் ஐலாவும் பிங்க் நிற உடையில் இருக்கின்றனர். அதில் ஐலா பாப்பா பார்க்க அச்சு அசலாக ஆலியா போலவே இருக்கிறார். அது பற்றி ரசிகர் ஒருவர் ஆலியா போலவே குழந்தை இருப்பதாக சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here