ஆலியா எனக்கு மருமகள் அல்ல, மகள் – நெகிழ்ச்சியில் மாமியார்! வைரலாகும் வீடியோ!

0
ஆலியா எனக்கு மருமகள் அல்ல, மகள் - நெகிழ்ச்சியில் மாமியார்! வைரலாகும் வீடியோ!
ஆலியா எனக்கு மருமகள் அல்ல, மகள் - நெகிழ்ச்சியில் மாமியார்! வைரலாகும் வீடியோ!
ஆலியா எனக்கு மருமகள் அல்ல, மகள் – நெகிழ்ச்சியில் மாமியார்! வைரலாகும் வீடியோ!

தற்போது தான் ஆலியா இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் ஆலியாவின் மாமியார் ஆலியா குறித்து ஒரு பேட்டியின் போது எனக்கு ஆலியா மருமகள் அல்ல, மகள் என கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியாவின் பேட்டி:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி ஒரே சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது இரண்டாவதாக ஆலியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும் பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது ஆலியா அவரது மாமியாருடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். கல்யாணம் பண்ணி வந்த புதுசில் மாமியாரை மிகவும் மிரட்டுவேன் என ஆலியா கூறியுள்ளார். அவரும் நான் சொல்வதை கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் செய்வார். நான் இவரை மாமியாராக பார்க்கவில்லை. என்னுடைய அம்மாவாக தான் பார்க்கிறேன். என் அம்மா போலவே உரிமையாக இதை சமைத்துக்கொடுங்கள், அதை சமைத்து கொடுங்கள் என கட்டளையிடுவேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் சொல்வதை சமைத்து கொடுப்பார். இவரை நான் மாமியாராக பெற்றதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அவரது மாமியாரும் ஆலியா பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். திருமணம் ஆனதில் இருந்து ஆலியாவும் சஞ்சீவும் தனியாக வெளியே சென்றதில்லை. சஞ்சீவ் கூட ஆலியாவுடன் தனியாக நேரம் செலவழிக்க வேண்டும் என நினைப்பான். மற்ற மனைவிமார்களும் அதை தான் விரும்புவார்கள். ஆனால் ஆலியா எங்கு சென்றாலும் என்னையும் கூட அழைத்து செல்வார். எப்போதும் குடும்பத்தில் உள்ளவர்களை மட்டுமே நினைத்து கொண்டிருப்பார். ஆலியா மருமகளாக வந்த பூரிப்பில் அவரது மாமியார் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here