2வது குழந்தை வளைகாப்பு விழாவில் ஐலா பாப்பாவுடன் ஓடி விளையாடிய ஆலியா – வைரலாகும் வீடியோ!

0
2வது குழந்தை வளைகாப்பு விழாவில் ஐலா பாப்பாவுடன் ஓடி விளையாடிய ஆலியா - வைரலாகும் வீடியோ!
2வது குழந்தை வளைகாப்பு விழாவில் ஐலா பாப்பாவுடன் ஓடி விளையாடிய ஆலியா - வைரலாகும் வீடியோ!
2வது குழந்தை வளைகாப்பு விழாவில் ஐலா பாப்பாவுடன் ஓடி விளையாடிய ஆலியா – வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போது தான் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கும் வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்பின் போது ஆலியா ஐலா பாப்பாவுடன் ஓடி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியாவின் வளைகாப்பு:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் இணைந்து நடித்ததன் மூலமாகவே இருவரும் காதலித்து பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருமணமும் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு ஆலியா மீண்டும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.

முல்லையை பார்த்து வருத்தப்படும் கதிர், சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க சொல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியா மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஆலியா சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்துவந்தார். பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். இதற்கு பிறகு ஆலியாவிற்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நடத்த வேண்டும் என சஞ்சீவ் பிளான் போட்டார். அதன்படி ஆலியாவின் வளைகாப்பை ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று ஒரே மேடையில் நடத்தினார்.

இவர்களின் திருமணத்தை விட வளைகாப்பு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வளைகாப்பு விழாவில் ஆலியாவுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சஞ்சீவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி இரண்டாவது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். தற்போது வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here