‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை விஜே சித்ராவுக்காக அவரது ரசிகர் செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை விஜே சித்ராவுக்காக அவரது ரசிகர் செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை விஜே சித்ராவுக்காக அவரது ரசிகர் செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை விஜே சித்ராவுக்காக அவரது ரசிகர் செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இவ்வுலகை விட்டு மறைந்து சென்ற விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை விஜே சித்ராவின் நினைவாக அவரது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் டாட்டூ குத்தி வெளியிட்ட வீடியோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

விஜே சித்ரா

பொதுவாக கலைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சொத்து என்றால் அவர்களது ரசிகர்கள் தான். ஏனென்றால் ரசிகர்கள் இல்லாமல் கலை இல்லை, கலைஞர்களும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும். அதுவும் தனது ரசிகர்களை மதிக்கும் கலைஞர்களுக்கு எப்போதும் ஏகப்பட்ட வரவேற்புகளும், ஆதரவுகளும் கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இப்போது சின்னத்திரை சீரியல் பிரபலங்களுக்கும் கிடைத்து வருகிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்!

அந்த வகையில் சின்னத்திரை சீரியல் ரசிகர்களின் எக்கச்சமான அன்புக்கு பாத்திரமான ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர் விஜே சித்ரா. எப்போதும் தனது ரசிகர்களை மதித்து, அவர்களுக்கான இடத்தை கொடுத்து வரும் விஜே சித்ராவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லையாக ஒவ்வொரு ரசிகர்களின் இல்லங்களில் வாழ்ந்து வந்த விஜே சித்ரா கடந்த ஆண்டில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார்.

இவரது இந்த அகால மரணம் அவரது ரசிகர்களால் இன்றும் கூட ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருந்து வருகிறது. என்றாலும் நடிகை சித்ரா மண்ணை விட்டு மறைந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில் அவரது நினைவு தினத்தன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அருகில் போஸ்டர்களை ஒட்டியும், அவரது வீட்டிற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லியும் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைய வைத்த தருணங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

Vijay TV Bigg Boss 5 Promo | தாமரையுடன் இனிமேல் பேசவே மாட்டேன் என சொன்ன பிரியங்கா!

இப்போது, விஜே சித்ரா மீதான இந்த அன்பை விட ஒரு படி மேலே போய் அவரது நினைவாக ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அதாவது, நடிகை சித்ராவின் புகைப்படம் ஒன்றை தனது நெஞ்சில் டாட்டூவாக குத்தி அந்த வீடியோவை அவரது ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜே சித்துவின் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!