பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.. தேனியில் விழிப்புணர்வு பேரணி – ஆட்சியர் தொடக்கம்!
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது .
விழிப்புணர்வு :
உலகில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் வன்கொடுமை சட்டங்கள் மற்றும் போக்சோ போன்ற பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன. நமது நாட்டில் ( நவ-25 ) சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு இத்தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் நடைபெற்றது .
Exams Daily Mobile App Download
அந்த வரிசையில் தேனியில் உள்ள தேனி மாவட்டம் பங்களா மேட்டில் சர்வதேச பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது .இந்த விழிப்புணர்வு பேரணியை நீதிபதி சஞ்சய் பாபு மற்றும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆகியோர் இணைந்து நடத்தினர்.இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
ட்ரெயின் பயணத்துக்கு புக் பண்ணி, பிளைட் ல பறக்கலாமா? ..சூப்பர் வாய்ப்பா இருக்கே!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் விழிப்புணர்வு பேரணியில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதியரசர் ராஜ்மோகன், சமூக நல ஆர்வலர் சியாமளா தேவி மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் ஆகியோர்களும் பங்கேற்றனர். இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பது மற்றும் பெண்களை பாதுகாப்பது போன்ற உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது.