சென்னை மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை – மீறினால் கடும் நடவடிக்கை!

0
சென்னை மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை - மீறினால் கடும் நடவடிக்கை!
சென்னை மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை - மீறினால் கடும் நடவடிக்கை!
சென்னை மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை – மீறினால் கடும் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பொது கழிப்பறைகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வந்த புகாரை அடுத்து, தற்போது மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனக்காட்சியின் அறிவுறுத்தலை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய எச்சரிக்கை:

பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ள எதுவாக, நகர் முழுவதும் இலவச பொது கழிப்பறைகளை பராமரித்து வருகிறது. இவை தினந்தோறும் முறையாக சுகாதார பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பில் கட்டமைக்கப்படுகிறது. இவை முழுக்க முழுக்க மக்களுக்கு கட்டணமின்றி பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

ஆனால், தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது கழிப்பறைக்கு கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முன்னதாக புகார்கள் வந்ததை அடுத்து கவனத்தில் கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை பயன்படுத்த கட்டணம் பெற்ற இரண்டு நபர்கள் மீது காவல்துறையில் மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக, இராயபுரம் மண்டலத்தில் தான் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

TN TRB தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம்!

வார்டு 59க்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலைய வளாகம் மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் எதிரில் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் தான் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டணம் வசூலித்த இரண்டு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!