அச்சுஅசல் ‘கண்ணம்மா’ ரோஷினி ஆகவே மாறிய வினுஷா தேவி – ரசிகர்கள் உற்சாகம்!

0
அச்சுஅசல் 'கண்ணம்மா' ரோஷினி ஆகவே மாறிய வினுஷா தேவி - ரசிகர்கள் உற்சாகம்!
அச்சுஅசல் 'கண்ணம்மா' ரோஷினி ஆகவே மாறிய வினுஷா தேவி - ரசிகர்கள் உற்சாகம்!
அச்சுஅசல் ‘கண்ணம்மா’ ரோஷினி ஆகவே மாறிய வினுஷா தேவி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது பல வித அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

தெலுங்கில் ‘கார்த்திகை தீபம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் டிவோர்ஸ் வாங்க கோர்ட் சென்றுள்ளனர். ஆனால், கோர்ட்டில் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் தங்களது குழந்தைகளுடன் 6 மாதங்கள் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, அஞ்சலியை மாயாண்டி மற்றும் வெண்பா இணைந்து சதி திட்டம் தீட்டி கடத்தி விடுகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி நிறுத்தம்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதன் காரணமாக அதிரடி திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பபடுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் பிரபல டிக் டாக் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே ஒரு சில குறும்படங்களில் நடித்து இருக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அவர் நடித்து வெளியான எபிசோடுகள் ஒரு சாயலில் ரோஷினியை போலவே இருந்ததால் அவருக்கும் தற்போது ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் நிம்மதி!

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோஷூட் மற்றும் விடீயோக்களை பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தற்போது தான் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே ‘Train your mind to see good in every situation’ என்று கேப்ஷன் செய்து உள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர். மேலும் அவர் அச்சுஅசல் ‘கண்ணம்மா’ ரோஷினி போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!