தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

0
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை - இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை - இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

தேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

கிராம உதவியாளர் வேலை:

தமிழ்நாடு அரசு அரசாணை எண்: 625, நாள்: 6.7.1995-ன் படி, கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன. தமிழக அரசின் எந்தவொரு திட்டத்தின் பலனும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழை, எளிய பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய முக்கிய காரணமே கிராம உதவியாளர்கள் தான். எத்தகைய பேரிடர் காலத்திலும், சாதாரண நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுபவர்கள் கிராம உதவியாளர்கள். வருடத்தின் 365 நாட்களும், அனைத்து தரப்பு மக்களும், ஏழை – பணக்காரன், சாதி, மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசு கொண்டு வரும் திட்டங்களின் பலனை அவர்களிடம் கொண்டு சேர்க்க பணிபுரியும் உழைக்கும் மக்களே கிராம உதவியாளர்கள். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் தேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளது.

பதவியின் பெயர்: கிராம உதவியாளர் (Village Assistant )

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 6 பணியிடங்கள்

பணியிடம்: தேனி மாவட்டம்

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர் கல்வி தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு: 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை: விண்ணப்பிக்கும் முறை: www.theni.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய www.theni.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை , ஆதார் அட்டை, குடும்ப அட்டை , ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்கள் அவசியம் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here