‘பீஸ்ட்’ படத்தின் தலைப்பு மாற்றம்? – படத்தின் அப்டேட் இதோ!
நடிகர் விஜயின் அடுத்த படமான இயக்குனர் வில்சனின் இயக்கத்தில் உருவாக்கி வரும் பீஸ்ட் படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விஜயின் ‘பீஸ்ட்’:
தளபதி விஜயின் 65 வது படமான பீஸ்ட் என்ற பெயரே ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது. மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு வெளியாகும் விஜயின் படம் என்பதால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநில விஜய் ரசிகர்களிடமும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் ஒவ்வொரு தகவல் வெளியாகும் போதும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக மாறி வருகிறது. படத்தின் பெயர் வெளியீட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டில் தமிழகத்தில் வேறு பேச்சே இல்லை. இந்த படத்தினை பற்றிய செய்திகள் மட்டுமே உலா வந்தது.
சுதந்திரதினம் பாதுகாப்பு பணியில் 3,000 காவலர்கள் – சென்னை காவல்துறை தகவல்!
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் பீஸ்ட் தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் செல்வராகவனின் கதாபாத்திரத்தில் முன்னதாக நடிக்க இயக்குனர் மிஸ்கின் அவர்கள் தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவில்,தற்போது ஒரு செய்தி, பீஸ்ட் படத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று வெளிவந்துள்ளது. தமிழக அரசு விரைவில் தமிழ் திரைப்படங்களுக்கான 8% விழுக்காடு வரிவிளக்கை தள்ளுபடி செய்வுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பீஸ்ட் என்ற ஆங்கில தலைப்பு மாற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது.