மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த விஜயகாந்த் – தொண்டர்கள் பிராத்தனை!

0
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த விஜயகாந்த் - தொண்டர்கள் பிராத்தனை!
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த விஜயகாந்த் - தொண்டர்கள் பிராத்தனை!
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்த விஜயகாந்த் – தொண்டர்கள் பிராத்தனை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக மீண்டும் இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்:

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஆப்கானில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் சென்று கல்வி கற்க அனுமதி – தலிபான்கள் அறிக்கை தகவல்!

இந்நிலையில் அவருக்கு தற்போது 69 வயது ஆகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. அவரால் இயல்பாக பேசவும், செயல்படவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால், தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார். அவரது குடும்பத்தினர் தான் கட்சியை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக பல முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

கடந்த 2019 ஆம் ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா செல்கிறார். பின்னர் உடல் பரிசோதனை முடிந்து ஓய்வு பெற்று பின்பு நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!