புது சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” செழியன் ஆர்யன் – ப்ரோமோ ரிலீஸ்!

0
புது சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி
புது சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி "பாக்கியலட்சுமி" செழியன் ஆர்யன் - ப்ரோமோ ரிலீஸ்!
புது சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” செழியன் ஆர்யன் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யன். அவர் தற்போது புதிய சீரியலில் களமிறங்க இருக்கிறார். அது குறித்த முழு தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

நடிகர் ஆர்யன்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு அந்த வகையில், தமிழக பெண்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பது தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கதைக்களம் புதுவிதமாக இருப்பதால் பலர் சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஆர்யன். அவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்த ஷாபனாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Exams Daily Mobile App Download

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியலின் பாதியிலேயே அவர் சீரியலை விட்டு விலகினார். அதனை தொடர்ந்து எந்த சீரியலிலும் அவரை பார்க்க முடியவில்லை. அவர் ஜீ தமிழில் புது சீரியலில் கமிட்டாக இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, தற்போது சீரியல் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இவர் ஜீ தமிழில் புதிதாக தொடங்கி இருக்கும் “மீனாட்சி பொண்ணுங்க” என்ற சீரியலில் கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார்.

ஈஸ்வரி பாட்டிக்காக தனது முடிவை மாற்றி கொள்ளும் பாக்கியா? சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

இந்த சீரியல் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் பிரபல சினிமா நடிகை அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மோக்ஷிதா,காயத்ரி யுவராஜ்,ப்ரணிகா தக்ஷு ஆகிய நடிகைகள் இந்த சீரியலில் நடிக்க இருக்கின்றனர். முதல் காட்சியில் முறுக்கு மீசையுடன், ருத்ராட்சம் அணிந்து கிராமத்து பையன் போல ஜீப்பில் ஆர்யன் என்ட்ரி கொடுக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!