விஜய் டெலி அவார்ட் நிகச்சியில் புது சரித்திரத்தை உருவாக்கிய பாக்கியலட்சுமி தொடர் – இவ்ளோ விருதா? ரசிகர்கள் குஷி!

0
விஜய் டெலி அவார்ட் நிகச்சியில் புது சரித்திரத்தை உருவாக்கிய பாக்கியலட்சுமி தொடர் - இவ்ளோ விருதா? ரசிகர்கள் குஷி!
விஜய் டெலி அவார்ட் நிகச்சியில் புது சரித்திரத்தை உருவாக்கிய பாக்கியலட்சுமி தொடர் - இவ்ளோ விருதா? ரசிகர்கள் குஷி!
விஜய் டெலி அவார்ட் நிகச்சியில் புது சரித்திரத்தை உருவாக்கிய பாக்கியலட்சுமி தொடர் – இவ்ளோ விருதா? ரசிகர்கள் குஷி!

தமிழ் மக்களிடையே அதிக அளவில் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சி என்ற பெருமை கொண்ட விஜய் டிவி ஒரு நாளும் அதில் கால் தடம் பதித்த கலைஞர்களை கவுரவிக்க மறந்ததில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கும் அவார்ட் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடர் புது சரித்திரத்தை உருவாக்கியுள்ளது.

விஜய் டெலிவிஷன் அவார்ட் 2022 :

ஒவ்வொரு நாளும் மக்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களானாலும் சரி, ரியாலிட்டி நிகழ்ச்சிகளானாலும் சரி இவற்றுக்கெல்லாம் விஜய் டிவி தனியாக பல செலவுகளை புரமோஷனுக்காக செய்து தான் வருகிறது. இவ்வாறு பல வருடங்களாகியும் தனக்கான இடத்தை விட்டு கொடுக்காமல் இன்று வரை சிறந்த பேர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி மட்டுமே. மேலும், விஜய் டிவியில் கால் தடம் பதித்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடுத்த கட்ட படிக்கு நகர்ந்து தான் இருக்கிறார்கள். இவ்வாறு பேரும், புகழும் கொண்ட தொலைக்காட்சி வாழ்க்கை என்னும் படிக்கு முன்னேற உதவும் முதல் படியாக இன்று வரை விளங்கி வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகுவதில் சிக்கல் – தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக 2014 ம் ஆண்டு முதல் தொடங்கி இப்போது 7வது விஜய் டிவி விருதுகள் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், எந்த சீரியல் பெஸ்ட் என்ற அடிப்படையில் இரண்டு சீரியல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சிறந்த ப்ரைம் டைம் சீரியலுக்கான விருதை ‘பாக்யலட்சுமி’ சீரியல் பெற்றுள்ளது மற்றும் ப்ரைம் டைம் அல்லாத சிறந்த சீரியலுக்கான விருதினை ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல் பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர் இந்த ஆண்டு இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. அதில் ஒன்று சிறந்த குழந்தை நட்சத்திரத்திர விருதாக ஹேமா – லட்சுமி இருவருக்கும், மற்றொன்று சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு விருது தற்போது கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. தமிழும் சரஸ்வதியும் சீரியல் சிறந்த அம்மா மற்றும் சிறந்த ஜோடி விருதுகளையும், ராஜா ராணி 2 சீரியல் சிறந்த மகன் மற்றும் சிறந்த மாமியார் விருதுகளையும், மௌன ராகம் சீரியல் சிறந்த மருமகள் விருதையும் பெற்றுள்ளது.

அந்த வரிசையில் கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி தொடரில் சிறந்த அம்மா விருதை பெற்ற சுசித்ரா இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதினையும், சிறந்த துணை நடிகைக்கான விருதினை அதே சீரியலின் கோபி காதலி ரேஷ்மாவும், சிறந்த ஆண் வில்லனுக்கான விருதினை கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் அவர்களும், சிறந்த அப்பா, சிறந்த எழுத்தாளர், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகள் உட்பட பாக்கியலட்சுமி சீரியல் இந்த ஆண்டு அனைத்து சீரியல்கள் மத்தியிலும் மொத்தமாக 10 விருதுகளை தட்டி அடித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!