விஜய் டிவி சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – நேர மாற்றம் அறிவிப்பு!
தமிழ் தொலைக்காட்சியில் மக்களால் அதிக அளவில் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கட்டும் நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் முதலிடம் பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி மட்டுமே. அப்பேற்பட்ட டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
விஜய் டிவி நிகழ்ச்சிகள்:
ஒவ்வொரு நாளும் மக்களால் விரும்பி பார்க்கப்படும் மெகா ஹிட் தொடர்களாக இருக்கட்டும், வாரயிறுதியில் மக்களை குஷிப் படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கொடுக்கும் ரியாலிட்டி ஷோவாக இருக்கட்டும், அனைத்தையும் ஒளிபரப்பவும் சிறந்த பேர்பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி மட்டுமே. விஜய் டிவியில் கால் தடம் பதித்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடுத்த கட்ட படிக்கு நகர்ந்து தான் இருக்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் ஒருவரே போதும்.
கோபி, ராதிகாவின் திருமண வைபோகம் – அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா! அடுத்து நடக்கப்போவது என்ன?
இவ்வாறு பேரும், புகழும் கொண்ட தொலைக்காட்சி வாழ்க்கை என்னும் படிக்கு முன்னேற உதவும் முதல் படியாக விளங்கி வருகிறது. அப்பேற்பட்ட தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சீரியலின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சீரியலுக்கு எந்த வகையில் மக்களிடத்தில் ஆதரவு இருக்கிறதோ அதே அளவுக்கு மேலாகவும் பாடல், காமெடி, சமையல் என அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர் பட்டாளங்கள் அதிகம் உள்ளது.
தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை – பெண்களுக்கு முன்னுரிமை..!
இந்நிலையில் தற்போது மக்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகும் நேரங்களை மாற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சூப்பர் சிங்கர் ஷோ வருகிற ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6:30 மணியிலும், ஞாயிறுக்கிழமை மாலை 6:00 மணிக்கும், ஸ்டார்ட் மியூசிக் ஷோ ஞாயிறு கிழமை மாலை 7:30 மணிக்கும், மற்றும் குக் வித் கோமாளி ஷோ சனிக்கிழமை தோறும் மாலை 9:30 மணியளவிலும், ஞாயிறு கிழமைகளில் மாலை 9:00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.