
ரோகினி அம்மா மூலம் உண்மையை அறியும் முத்து, மீனா.. நிறுத்தப்படுமா திருமணம்? “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், மனோஜ் ரோகினி கல்யாண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் ரோகினியின் அம்மாவை முத்து மற்றும் மீனா சந்திக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவும் மீனாவும் பாட்டி ஊருக்கு சென்று இருக்கின்றனர். இந்நிலையில் பஸ் செல்லும் போது அங்கே ரோகினியின் அம்மா அவருடைய மகனுடன் வருகிறார். அப்போது ரோகினியின் மகனை மீனா பாசமாக பார்த்துக் கொள்ள, ரோகினியின் அம்மாவும் அவருக்கு நெருக்கமாக மாறுகின்றனர். இந்நிலையில் ரோகினி அம்மா அவர்களுடன் குடும்ப விசயங்களை பேச, உடனே ரோகினி புகைப்படத்தை காட்டி இது தான் என்னுடைய மகள் என சொல்கிறார்.
Airports Authority of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
அப்போது முத்து மற்றும் மீனாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது. அவர்கள் மனோஜ் திருமணத்தை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனோஜ் மோசமானவன் என்பதால் அவனுக்கு ரோகினி தான் பொருத்தமானவள் என அவர்கள் உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர். இதற்கிடையே மனோஜ் ரோகினி கல்யாண ஏற்பாடுகள் நடக்க, ரோகினி பற்றி விஜயாவிற்கு உண்மை தெரிந்தால் என்ன பிரச்சனை வரும் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.