மாற்றம் செய்யப்பட்ட விஜய் டிவி சீரியல்கள் – பிக்பாஸ் சீசன் 6 தொடக்கம்! முழு விவரம் இதோ!

0
மாற்றம் செய்யப்பட்ட விஜய் டிவி சீரியல்கள் - பிக்பாஸ் சீசன் 6 தொடக்கம்! முழு விவரம் இதோ!
மாற்றம் செய்யப்பட்ட விஜய் டிவி சீரியல்கள் - பிக்பாஸ் சீசன் 6 தொடக்கம்! முழு விவரம் இதோ!
மாற்றம் செய்யப்பட்ட விஜய் டிவி சீரியல்கள் – பிக்பாஸ் சீசன் 6 தொடக்கம்! முழு விவரம் இதோ!

விஜய் டிவியில் வருகிற அக்.9 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ப்ரைம் டைம் சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எந்தெந்த சீரியல்கள் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரியல்கள் நேர மாற்றம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களை பார்க்க பல ரசிகர்கள் உள்ள நிலையில், ப்ரைம் டைம் சீரியல்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருகிற அக். 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. அதனால் ப்ரைம் டைம் சீரியல்கள் வேறு நேரத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். அதே போல இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும். இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியல் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் சீரியல் நடிகர் தற்கொலை.. அதிர்ச்சியில் சின்னத்திரை – ரசிகர்கள் இரங்கல்!

Exams Daily Mobile App Download

அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமம் நடைபெற இருப்பதால் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாரதிதாசன் காலனி சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சிப்பிக்குள் முத்து சீரியலும் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!