ரசிகர்களுக்கு தங்களது காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஜோடி – இணையத்தில் வைரல்!

0
ரசிகர்களுக்கு தங்களது காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஜோடி - இணையத்தில் வைரல்!
ரசிகர்களுக்கு தங்களது காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஜோடி – இணையத்தில் வைரல்!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான இருவர், தற்போது காதலிப்பதாக தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

காதல் ஜோடிகள்

சின்னத்திரையில் ஒரே சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த லிஸ்டில் தற்போது புதிதாக ஒரு காதல் ஜோடி இணைந்து இருக்கிறார்கள். விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, கடந்த வாரம் முடிவுக்கு வந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்தவர்கள் தான் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இருவரும் அந்த சீரியலில் ஜோடியாக நடிக்காமல் இருந்தாலும், அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து இருக்கிறது.

விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து மற்றும் ஜீ தமிழில் ரஜினி சீரியலிலும், அவர் நடித்திருக்கிறார். அதே போல சமுக்தாவும் நிறைமாத நிலவே வெப் சீரீஸ் மூலமாக மிகவும் பிரபலமானவர். தற்போது இருவரும் காதலிப்பதாக, அவர்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கோபி ராதிகா திருமணத்தை தெரிந்து கொண்ட ராஜேஷ் – சீரியலில் அடுத்து நடக்கும் பூகம்பம்!

Exams Daily Mobile App Download

அவருடைய பதிவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரையில் ஒரே சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலில் விழுந்த பலர் இருக்கும் நிலையில், அவர்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ள இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!