விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்த அறந்தாங்கி நிஷா? புதிய திருப்பம்! வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இணைந்த அறந்தாங்கி நிஷா? புதிய திருப்பம்! வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இணைந்த அறந்தாங்கி நிஷா? புதிய திருப்பம்! வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்த அறந்தாங்கி நிஷா? புதிய திருப்பம்! வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமாவாக நடித்து வரும் லிசாவுடன் இணைந்து அறந்தாங்கி நிஷா செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வலைதளங்களில் வெளியாக நிஷா ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்திருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அறந்தாங்கி நிஷா

ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் பல ஆண்டு காலமாக பிரிந்திருந்த பாரதியும் கண்ணம்மாவும் இப்போது மீண்டுமாக ஒன்றிணைந்துள்ளனர். இதனுடன் பாரதி மற்றும் கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகள் மோதலும், காதலுமாக நகர்ந்து வர இந்த சீரியலின் TRP எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது.

சரவணனை சமையல் போட்டியில் ஜெயிக்க விடாமல் செய்யும் அர்ச்சனாவின் சதி திட்டம் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

இது தவிர ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் முக்கிய வில்லியாக கருதப்படும் நடிகை பரினாவும், சீரியலை விட்டு சில காலம் விலகி இருக்கும் நிலையில், கதையில் எந்த இடையூறும் இல்லாமல் ஸ்வாரசியமாக நகர்ந்து வருகிறது. இப்படி இருக்க தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது விஜய் டிவியின் நட்சத்திர பேச்சாளரான அறந்தாங்கி நிஷா ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்திருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

‘பிக் பாஸ்’ சீசன் 5ன் வைல்ட் கார்டு அனுபவம் குறித்து மனம் திறந்த அபிஷேக் – வைரலாகும் வீடியோ!

அதாவது,வைகைப்புயல் வடிவேலுவின் பிரபலமான வசனத்திற்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹேமா, பேபி லிசாவுடன் இணைந்து அறந்தாங்கி நிஷா செய்துள்ள ரீசன்ட் ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அறந்தாங்கி நிஷா ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்துள்ளாரா என்றும், நிஷா இந்த சீரியலில் நடித்திருந்தால் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!