ஆண் குழந்தைக்கு தாயான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை – அவரது கணவர் வெளியிட்ட பதிவு!

0
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை - அவரது கணவர் வெளியிட்ட பதிவு!
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை - அவரது கணவர் வெளியிட்ட பதிவு!
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை – அவரது கணவர் வெளியிட்ட பதிவு!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சமீரா ஷெரிப். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை அவர் கணவர் பகிர்ந்துள்ளார்.

குழந்தை பிறப்பு:

விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் சமீரா ஷெரிப் மற்றும் சயத் அன்வர். அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்கள் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் பங்கேற்றனர். அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் வீடியோக்கள் வெளியிட்டு கொண்டே இருந்தார். டான்ஸ் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என அவர் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் ஆபத்தான முறையில் போட்டோஷூட் – குவியும் லைக்ஸ்!

அந்த விமர்சனங்களுக்கு அவர் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார். “என் குழந்தையை எனக்கு பார்த்துக் கொள்ள தெரியும், நீங்கள் எனக்கு பாடம் எடுக்காதீங்க” என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பல போட்டோஷூட்கள் நடனம் ஆடும் வீடீயோக்களை பதிவிட்ட அவர் ‘ஆக்டிவாக இருப்பது கர்ப்ப காலத்தில் மிகவும் முக்கியம். அது பற்றிய விழிப்புணர்வை நான் ஏற்படுத்த நினைக்கிறேன்’ என தெரிவித்து வந்தார்.

ரோஜாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – கடந்த வார TRP ரேட்டிங்!

இந்நிலையில் அவருக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அவர் Babyanweera என பெயர் வைத்துள்ளார். அதற்கும் பல விமர்சனங்கள் வந்தது. எப்படி பேபி Gender கண்டுபிடித்திங்க என கமெண்ட்கள் வந்தது. இந்நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்தை அவரது கணவர் அன்வர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா பிரச்சனையால் யாரையும் உள்ளே விடவில்லையாம். தற்போது தனது கணவர் குழந்தையை பார்க்க வந்த பின் 3 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!