கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி சீரியல் நடிகை – வைரல் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி சீரியல் நடிகை - வைரல் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி சீரியல் நடிகை - வைரல் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி சீரியல் நடிகை – வைரல் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “சரவணன் மீனாட்சி” சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரட்சிதா, அவர் தன்னுடைய காதல் கணவர் தினேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

சரவணன் மீனாட்சி ரட்சிதா:

சினிமாவில் நடிக்கும் நடிகை நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்குமோ அந்த அளவிற்கு சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை ரட்சிதா மகாலக்ஷ்மி.

ஆணாக மாறிய சன் டிவி பிரபல சீரியல் நடிகை கயல் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

அவர் சமீபத்தில் விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். ஆனால் சேனல் தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அரண்மனை கிளி சீரியல் நடிகை நடித்து வருகிறார். ரட்சிதா விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் நடித்ததன் மூலம் உடன் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.

விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் தனது கணவருடன் வந்து விருதை வாங்கி தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் நேற்று உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களது காதலர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் ரட்சிதா அது பற்றி எந்த பதிவும் வெளியிடவில்லை. அதனால் கடந்த 1 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக அவர்கள் பிரிந்து இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.

மயக்கம் தெளிந்து கண் விழித்த கோதை, ரத்தம் கொடுக்கும் தமிழ் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

அது குறித்த விளக்கத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டார் தரப்பிலும் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் மற்ற சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இருவரும் விரைவில் சேர வேண்டும் எனவும் நல்ல ஜோடி இருவரும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here