“அபி டெய்லர்” சீரியலில் ஒன்று சேர்ந்த விஜய் டிவி வில்லிகள் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

0
"அபி டெய்லர்" சீரியலில் ஒன்று சேர்ந்த விஜய் டிவி வில்லிகள் - வெண்பா வெளியிட்ட வீடியோ!
“அபி டெய்லர்” சீரியலில் ஒன்று சேர்ந்த விஜய் டிவி வில்லிகள் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் வில்லி வெண்பாவாக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை பரீனா தற்போது கலர்ஸ் தமிழில் “அபி டெய்லர்” சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அபி டெய்லர்:

விஜய் டிவி சீரியலில் கொடூரமான வில்லியாக தோன்றி பாரதி, கண்ணம்மாவை பிரிக்க கொலை கூட செய்த வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “அபி டெய்லர்” சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அந்த சீரியலில் அவர் பவானி கதாபாத்திரத்தில் அபிக்கு தோழியாக நடிக்கிறார். இதுவரை பரீனாவை வில்லியாக பார்த்த ரசிகர்கள் தற்போது பரீனாவை நல்ல ஒரு தோழியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்த பிரியங்கா – வைரலாகும் வீடியோ!

தற்போது அபி வெளி ஊருக்கு செல்ல இருக்கும் நிலையில் அவரது தோழி பவானி அவருடைய கடை வேலைகளை பார்க்க இருக்கிறார். மேலும் அந்த சீரியலில் வில்லியாக விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். ராதிகா கதாபாத்திரமும் நெகட்டிவ் ரோலாக மாற இருக்கிறது. இந்த சீரியலிலும் அவர் வில்லியாக நடிக்கிறார். இந்நிலையில் வில்லிகள் கூட்டணி அமைத்து எடுத்து ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகி விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்த ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் ரேஷ்மா உடன் பரீனா இணைந்து நடனம் ஆடி இருக்கிறார். அவருடன் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் நடனம் ஆடி இருக்கிறார். பரீனா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வந்ததால் அவர் பாரதி கண்ணம்மாவில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து இரண்டு சீரியல்களிலும் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!