தெலுங்கு சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நாயகன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
தெலுங்கு சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நாயகன் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தெலுங்கு சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நாயகன் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தெலுங்கு சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நாயகன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

ராஜ பார்வை சீரியல் மூலமாக பிரபலமான நடிகர் முன்னா தற்போது குண்டம்மா கதா என்கிற தெலுங்கு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குண்டம்மா கதா

திரைப்படங்களை விட மக்கள் அதிகமாக சீரியல்களை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல் நடிகர்களுக்கும் திரைப்பட நடிகர்கள் அளவுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜ பார்வை என்னும் சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் நடிகர் முன்னா. இந்த சீரியலை தொடர்ந்து வைதேகி காத்திருந்தால் என்னும் சீரியலில் நடிகர் பிரஜின்க்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமானார். பின்பு பாதியிலேயே ‘வைதேகி காத்திருந்தால்’ சீரியல் நிறைவடைந்துவிட்டது. இந்த சீரியல்களில் சில நாட்களே நடித்திருந்தாலும் எக்கச்சக்க ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார்.

ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் கோபி – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தற்போது நடிகர் முன்னா குண்டம்மா கதா என்கிற தெலுங்கு சீரியலில் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த நடிகை ஹர்ஷாலா ஹனி நடித்து கொண்டிருக்கிறார். ஃபிட்னஸ்தான் முக்கியம் என எப்போதும் ஃபிட்னஸ் குறிப்புகளுடனே நாயகன் சுற்றி கொண்டிருக்கிறார். ஜிம்மில் பல பெண்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் சாப்பிட வேண்டும் என அனைத்திலும் கவனமாக இருப்பவர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வரும் பெண்களையும் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்று கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால், நாயகி அப்படியே எதிர்மறையானவள். பஜ்ஜி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறார். என்ன கடையில் என்ன உணவு கிடைக்கும், என்ன சாப்பிடலாம் என முழுக்க முழுக்க உணவை மட்டுமே உயிராய் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர்களுக்கு இடையே நடைபெறும் காதல் சண்டைகளை அழகாக இந்த சீரியல் பிரதிபலிக்க காத்திருக்கிறார். தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!